TNPSC TAMIL QUESTIONS
COLLECTION - 06
FREE PDF DOWNLOAD
TNPSC
TAMIL QUESTIONS - 06
1) சேர்த்தெழுதுக - ஓடை + ஆட
(A) ஓடை ஆட
(B) ஓடையாட
(C) ஓடையோட
(D) ஓடைவாட
(E) விடை தெரியவில்லை
2) சேர்த்தெழுதுக - வாசல் + அலங்காரம்
(A) வாசல் அலங்காரம்
(B) வாசலங்காரம்
(C) வாசலலங்காரம்
(D) வாலங்காரம்
(E) விடை தெரியவில்லை
3) ஈதல் என்பதன் எதிர்ச்சொல்
(A) கொடுத்தல்
(B) ஏற்றல்
(C) அளித்தல்
(D) வழங்குதல்
(E) விடை தெரியவில்லை
4) எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்
"நீக்குதல்" எதிர்ச்சொல் தருக
(A) போக்குதல்
(B) தள்ளுதல்
(C) அழித்தல்
(D) சேர்த்தல்
(E) விடை தெரியவில்லை
5) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) வியத்தல்
(B) வாழ்க்கை
(C) ஆளல்
(D) பாடியவள்
(E) விடை தெரியவில்லை
6) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
(A) அன்பு
(B) பஞ்சு
(C) அஃது
(D) மண்டு
(E) விடை தெரியவில்லை
7) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பூவின் நிலையைக் குறிக்காத ஒரு சொல்லைத் தேர்ந்தெடு
(A) அரும்பு
(B) வீ
(C) போது
(D) கொழுந்து
(E) விடை தெரியவில்லை
8) சந்திப் பிழையைச் சரிபார்த்து எழுதுக
(A) சிற்பகலை கூடமாக திகழ்கிறது
(B) சிற்பக்கலை கூடமாக திகழ்கிறது
(C) சிற்பக்கலைக் கூடமாகத் திகழ்கிறது
(D) சிற்பக்கலைக் கூடமாக திகழ்கிறது
(E) விடை தெரியவில்லை
9) மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
(A) தென்னந்தோப்பு
(B) தென்னந்தோட்டம்
(C) தென்னைவயல்
(D) தென்னங்காடு
(E) விடை தெரியவில்லை
10) வழுவற்ற தொடர் எது?
(A) நேற்று வருவான்
(B) நேற்று வந்தான்
(C) நேற்று வருகிறான்
(D) நேற்று வா
(E) விடை தெரியவில்லை
11) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
(a)
Excavation 1. பொறிப்பு
(b)
Epigraphy 2. அகழாய்வு
(c)
Herostone 3. கல்வெட்டியல்
(d)
Inscription 4. நடுகல்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 1 2 3 4
(C) 3 2 1 4
(D) 4
1 2 3
(E) விடை தெரியவில்லை
12) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
(A) Literacy -
கல்வியறிவு
(B)
Guidance - நீதி
(C)
Child Labour - தொழில் வரி
(D)
Discipline - வழிகாட்டி
(E) விடை தெரியவில்லை
13) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக.
(A) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின
(B) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின
(C) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசிந
(E) விடை தெரியவில்லை
14) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக
பரவை பறவை
(A) பரவுதல் - பறத்தல்
(B) ஆழி - இறகு
(C) பரப்புதல் - பெயர்ச்சொல்
(D) கடல் - புள்
(E) விடை தெரியவில்லை
15) கொடுக்கப்பட்ட வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
கொடு
(A) கொடுத்தான்
(B) கொடு
(C) கொடுத்தோர்
(D) கொடுத்து
(E) விடை தெரியவில்லை
16) சரியான அகர வரிசையை எழுதுக.
(A) சொம்பு, செம்மை, சாட்சி, சரம்
(B) செம்மை, சாட்சி, சரம், சொம்பு
(C) சாட்சி, சரம், செம்மை, சொம்பு
(D) சரம், சாட்சி, செம்மை, சொம்பு
(E) விடை தெரியவில்லை
17) சரியான அகர வரிசையை எழுதுக.
(A) குருவி, கோட்டை, காட்சி, கரம்
(B) கரம், காட்சி, குருவி, கோட்டை
(C) கோட்டை, குருவி, காட்சி, கரம்
(D) காட்சி, கரம், குருவி, கோட்டை
(E) விடை தெரியவில்லை
18) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A) அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், கொல்களிறு
(B) தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், அண்ணன் தம்பி, கொல்களிறு
(C) அண்ணன் தம்பி, வீசுதென்றல், தாய்சேய், செங்காந்தள், கொல்களிறு
(D) கொல்களிறு, அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், கொல்களிறு
(E) விடை தெரியவில்லை
19) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு
(B) கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு
(C) உதிக்கின்ற கிழக்குத்திசை பெயர் ஞாயிறு
(D) ஞாயிறு உதிக்கின்ற பெயர் கிழக்குத் திசை
(E) விடை தெரியவில்லை
20) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
(A) உலகம் தமிழ் மொழி வாழட்டும் - உள்ள வரையிலும்
(B) உலகம் வாழட்டும் உள்ளவரையிலும் தமிழ் மொழி
(C) உலகம் உள்ள வரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
(D) உலகம் தமிழ் மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
(E) விடை தெரியவில்லை
21) 'கடைக்குப் போவாயா?' எனும் வினாவிற்குரிய விடைகளை பொருத்துக:
விடை வகை சான்று
(a) உற்றது உரைத்தல் விடை 1. நீ செல்
(b) மறை விடை 2. போவேன்
(c) நேர் விடை 3. கால் வலிக்கிறது
(d) ஏவல் விடை 4. போகமாட்டேன்
(a)
(b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
22) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் :
சரியானத் தொடரைத் தேர்ந்தெடு :
விரிந்து - விரித்து
(A) காற்று வீசியது, பூக்கள் விழுந்தன, மயில் விரித்தது
(B) மழைக் காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன, மயில் தோகையை விரித்தது
(C) மயில் தோகையை விரித்ததால் பூக்கள் விரிந்தன
(D) பூக்கள் விரிந்ததால் மயில்கள் ஆடியது
(E) விடை தெரியவில்லை
23.
"அத்தி பூத்தாற்போல" - உவமை கூறும் பொருள் தெளிக.
(A) வெகுமானம்
(B) செயற்கரிய செயல்
(C) அரியநிகழ்வு
(D) துன்பச் செயல்
(E) விடை தெரியவில்லை
24) மலரும் மணமும் போல - உவமை கூறும் பொருள் தெளிக.
(A) நட்பு
(B) பகைமை
(C) வேற்றுமை
(D) ஒற்றுமை
(E) விடை தெரியவில்லை
25) SUPER
COMPUTER என்பதன் கலைச்சொல் யாது?
(A) மடிக்கணினி
(B) கணினி அறிவியல்
(C) மீத்திறன் கணினி
(D) கணினி திறன்
(E) விடை தெரியவில்லை
26) Anticlockwise
என்பதன் கலைச்சொல் யாது?
(A) வலஞ்சுழி
(B) இடஞ்சுழி
(C) முன்சுழி
(D) பின்சுழி
(E) விடை தெரியவில்லை
27) நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)?
(A) பாவை அண்ணனைப், பார்த்து "அண்ணா எனக்கு ! ஓர் உதவி செய்வாயா என்று கேட்டாள்.
(B) பாவை அண்ணனைப் பார்த்து அண்ணா? எனக்கு ஓர் உதவி செய்வாயா? என்று கேட்டாள்.
(C) பாவை அண்ணனைப் பார்த்து, "அண்ணா எனக்கு ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டாள்.
(D) பாவை அண்ணனைப் "பார்த்து அண்ணா ! எனக்கு ஓர் உதவி செய்வாயா என்று கேட்டாள்.
(E) விடை தெரியவில்லை
28) நிறுத்தற் குறிகள் அறிக.
சரியாக நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்ந்தெடு.
(A)
"உங்கள் தந்தையும் அரசரா!" என்றாள் கயல்
(B)
"உங்கள் தந்தையும் அரசரா"? என்றாள் கயல்.
(C) உங்கள் தந்தையும் அரசரா? என்றாள் கயல்.
(D) உங்கள் தந்தையும், அரசரா ! என்றாள் கயல்.
(E) விடை தெரியவில்லை
29) பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு.
சரியான எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு.
(A) வரிசையாக நில்
(B) வரிசையாக நில்லு
(C) வரிசையாக நின்னுக்கோ
(D) வரிசையாக நின்னிட்டியா
(E) விடை தெரியவில்லை
30) பேச்சு வழக்குத் தொடருக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரினை எழுது.
காலை உணவை சாப்ட்டியா?
(A) காலை உணவை சாப்டியா?
(B) காலை உணவைச் சாப்பிட்டாயா?
(C) காலை உணவை சாப்டாச்சா?
(D) காலை உணவு ஆச்சுதா?
(E) விடை தெரியவில்லை
31) சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
திருக்குறளில் உள்ள குறட்பாக்கள் ____________?
(A) எவ்வளவு
(B) எத்தனை
(C) யாவை
(D) எவை
(E) விடை தெரியவில்லை
32) சரியான இணைப்புச் சொல் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக.
(A) நேற்று கனமழை பொழிந்தது. ஏனெனில் ஏரி, குளங்கள் நிரம்பின.
(B) நேற்று கனமழை பொழிந்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின.
(C) நேற்று கனமழை பொழிந்தது. அதுபோல ஏரி குளங்கள் நிரம்பின.
(D) நேற்று கனமழை பொழிந்தது. இருந்தபோதிலும் ஏரி குளங்கள் நிரம்பின.
(E) விடை தெரியவில்லை
33) சரியான மரபுத் தொடரைத் தேர்க.
(A) கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக் குருளைகள் ஓடின
(B) கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக் குட்டிகள் ஓடின
(C) கோழிப்பேத்தைகளைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள் ஓடின
(D) கோழிப்பேத்தைகளைப் பிடிக்கப் பூனைக் குருளைகள் ஓடின
(E) விடை தெரியவில்லை
34) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
எவ்வகைத் தொடர்
(A) வினாத் தொடர்
(B) கட்டளைத் தொடர்
(C) செய்தித் தொடர்
(D) உணர்ச்சித் தொடர்
(E) விடை தெரியவில்லை
35) கூற்று - சரியா? தவறா?
(1) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
(2)
1952 இல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.
(3) சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார்.
(A) கூற்று 1, 2, 3 தவறு
(B) கூற்று 1, 2 சரி 3 மட்டும் தவறு
(C) கூற்று 1,2,3 சரி
(D) கூற்று 1 சரி, 2, 3 தவறு
(E) விடை தெரியவில்லை
36) சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
Nanotechnology
என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
(A) நுண் உயிரித் தொழில் நுட்பம்
(B) உயிரித் தொழில் நுட்பம்
(C) விண்வெளித் தொழில் நுட்பம்
(D) மீநுண் தொழில் நுட்பம்
(E) விடை தெரியவில்லை
37) சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்க.
Intellectual
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க.
(A) ஆய்வாளர்
(B) ஆய்வேடு
(C) அறிவாளர்
(D) துப்பறிவாளர்
(E) விடை தெரியவில்லை
38) பொருத்தமான பொருளைத்தெரிவு செய்தல்:
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்ப விளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவக சிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
(a) (b) (c)
(d)
(A) 3 4 1 2
(B) 2 3 1 4
(C) 3 1 4 2
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
39) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் :
சொல் பொருள்
(a) மேதி 1. குளக்கரை
(b) தரளம் 2. எருமைக்கடா
(c) பகடு 3. எருமை
(d) கோடு 4. முத்து
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 3 4 2 1
(C) 4 1 3 2
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
40) பிழை திருத்துக - சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.
ஒன்று + உலகம்
(A) ஓர் உலகம்
(B) ஒரு உலகம்
(C) ஒன்று உலகம்
(D) மூன்றும் சரி
(E) விடை தெரியவில்லை
41) பிழை திருத்துக - சரியான எண்ணடையைத் தெரிவு செய்க
ஒன்று + மரம்
(A) ஒரு மரம்
(B) ஓர் மரம்
(C) ஒன்று மரம்
(D) மூன்றும் சரி
(E) விடை தெரியவில்லை
42) சொல் - பொருள் - பொருத்துக:
(a) கொண்டல் 1. மேற்கு
(b) கோடை 2. தெற்கு
(c) வாடை 3. கிழக்கு
(d) தென்றல் 4. வடக்கு
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 1 4 2
(C) 4 3 2 1
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை
கீழ்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
தமிழர் வளர்த்த நுண்கலைகளில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்ககாலத்திற்கு முன்னரே வரையப்பட்ட ஓவியங்களை கண்ணெழுத்து என்று வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப்பொருள். இதனைப் பரிபாடல், குறுந்தொகை அடிகள் தெளிவுபடுத்துகின்றன. பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துக்களைப் புலப்படுத்தினர். அவை மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன. நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியவற்றைக் கொண்டு வரையப்பட்டவை கோட்டோவியங்கள் எனப்படும்.
43) எழுத்து என்பதன் பொருள் யாது?
(A) சொல்
(B) ஓவியம்
(C) பதம்
(D) மொழி
(E) விடை தெரியவில்லை
44) கீழ்க்கண்டவற்றுள் நுண்கலை அல்லாதது எது?
(A) ஓவியம்
(B) இசை
(C) அறிவியல்
(D) சிற்பக்கலை
(E) விடை தெரியவில்லை
45) மொழிக்குறியீடுகள் எதிலிருந்து தோன்றின?
(A) ஒலிகள்
(B) ஒளிகள்
(C) எழுத்து
(D) ஓவியம்
(E) விடை தெரியவில்லை
46) கோட்டோவியங்கள் இவற்றுள் எதைக் கொண்டு வரையப்பட்டன?
(A) நேர்கோடு
(B) கோணக்கோடு
(C) வளைகோடு
(D) இவையனைத்தும்
(E) விடை தெரியவில்லை
47) சங்க காலத்தில் ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்?
(A) கண்ணெழுத்து
(B) வட்டெழுத்து
(C) ஓவிய எழுத்து
(D) சித்திர எழுத்து
(E) விடை தெரியவில்லை
48) 'இன்மொழி’- பிரித்து எழுதுக.
(A) இன் + மொழி
(B) இ+மொழி
(C) இன்ன + மொழி
(D) இனிமை + மொழி
(E) விடை தெரியவில்லை
49) பிரித்தெழுதுக - 'அன்மொழித்தொகை'
(A) அண்மை + மொழி + தொகை
(B) அல் + மொழி + தொகை
(C) அல் + மொழித்தொகை
(D) அயன்மொழி + தொகை
(E) விடை தெரியவில்லை
50) பிரித்தெழுது - "நன்செய்"
(A) நன்+செய்
(B) நன்று + செய்
(C) நன்மை + செய்
(D) நல் + செய்
(E) விடை தெரியவில்லை
51) பிரித்தெழுது - “அருந்துணை”
(A) அரு + துணை
(B) அருந் + துணை
(C) அருமை + துணை
(D) அருந்து + இணை
(E) விடை தெரியவில்லை
52) பிரித்தெழுதுக -"தேர்ந்தெடுத்து"
(A) தேர்ந்+தெடுத்து
(B) தேர் + எடுத்து
(C) தேர்ந்து + அடுத்து
(D) தேர்ந்து + எடுத்து
(E) விடை தெரியவில்லை
53) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) பெயரெச்சம்
(B) வினையெச்சம்
(C) வினைமுற்று
(D) முற்றெச்சம்
(E) விடை தெரியவில்லை
54) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) வெட்சி
(B) நொச்சி
(C) குறிஞ்சி
(D) வஞ்சி
(E) விடை தெரியவில்லை
55) பொருந்தாத இணை எது?
I. விளை - உண்டாக்குதல்
II. விழை - விரும்பு
III. இளை - செடி
IV. இழை - நூல் இழை
(A) I
(B)
II
(C) III
(D)
IV
(E) விடை தெரியவில்லை
56) பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
(A) பாக்கு
(B) பஞ்சு
(C) பாட்டு
(D) பத்து
(E) விடை தெரியவில்லை
57) சந்திப்பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக
(A) பண்டை தமிழ் நாகரிகம் தனிபெரும் நாகரிகம்
(B) பண்டைத் தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம்
(C) பண்டைத் தமிழ் நாகரிகம் தனிபெரும் நாகரிகம்
(D) பண்டை தமிழ் நாகரிகம் தனிப்பெரும் நாகரிகம்
(E) விடை தெரியவில்லை
58) பிழை திருத்தம் - வழுவுச் சொற்களை நீக்குதல்
வழூஉச் சொல்லற்ற தொடர் எது ?
(A) நீ வந்தேன்
(B) நீ வந்தான்
(C) நீ வந்தாய்
(D) நீ வந்தாள்
(E) விடை தெரியவில்லை
59) பிழை திருத்தம் - பிறமொழிச் சொற்களை நீக்குதல்
பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி
(A) நாளை பிரதம மந்திரி தமிழகம் வருகிறார்
(B) நல்ல பாம்பிற்கு விடம் அதிகம்
(C) வானத்தில் பறவை பறந்தது
(D) மாலா அலமாரியில் புத்தகத்தை அடுக்கினாள்
(E) விடை தெரியவில்லை
60) சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக
(A) முதியவருக்குக் கொடுக்கச் சொன்னார்
(B) முதியவருகு கொடுகச் சொன்னார்
(C) முதியவருக்கு கொடுக சொன்னார்
(D) முதியவருக்குக் கொடுகச் சொன்னார்
(E) விடை தெரியவில்லை
61) 'வெய்யோன்' என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
(A) பகலவன்
(B) ஆதவன்
(C) ஞாயிறு
(D) நிலவு
(E) விடை தெரியவில்லை
62) ஒரு பொருள் தரும் பல சொற்கள் - அணி
(A) அணிகலன், அழகு
(B) இலக்கணம், அணில்
(C) ஆடை, அணிதல்
(D) நகைகள், அணிதல்
(E) விடை தெரியவில்லை
63) வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க
"வந்தான்"
(A) வந்த
(B) வ
(C) வந்து
(D) வா
(E) விடை தெரியவில்லை
64) "கண்டார்"- என்பதன் வேர்ச்சொல் கண்டறிக
(A) கண்
(B) கண்ட
(C) காண்
(D) கண்டு
(E) விடை தெரியவில்லை
65) பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?
(A) செல்க
(B) ஓடு
(C) வாழிய
(D) வாழ்க
(E) விடை தெரியவில்லை
66) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
(A) அளபெடுத்தல், ஈதல், இசைநிறை, உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
(B) அளபெடுத்தல், இசைநிறை, உரனசைஇ, ஈதல், ஓஒதல் வேண்டும்
(C) அளபெடுத்தல், இசைநிறை, ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
(D) இசைநிறை, அளபெடுத்தல், ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
(E) விடை தெரியவில்லை
67) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
(B) உயிரளபெடை, தனிமொழி, ஒற்றளபெடை, தொடர்மொழி, பொதுமொழி
(C) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி
(D) ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்மொழி, உயிரளபெடை, பொதுமொழி
(E) விடை தெரியவில்லை
68) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
அறிவு, அருள், ஆசை, அச்சம், அன்பு
(A) அச்சம், அன்பு, ஆசை, அருள், அறிவு
(B) அச்சம், ஆசை, அன்பு, அருள், அறிவு
(C) அச்சம், அருள், அறிவு, அன்பு, ஆசை
(D) அச்சம், அன்பு, அருள், அறிவு, ஆசை
(E) விடை தெரியவில்லை
69) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A) வாழ்த்துதல் விதித்தல் வேண்டல் வைதல்
(B) வைதல் வேண்டல் விதித்தல் வாழ்த்துதல்
(C) வேண்டல் வைதல் விதித்தல் வாழ்த்துதல்
(D) விதித்தல் வாழ்த்துதல் வேண்டல் வைதல்
(E) விடை தெரியவில்லை
70) விடை எத்தனை வகைப்படும்?
(A) ஆறு
(B) எட்டு
(C) நான்கு
(D) ஏழு
(E) விடை தெரியவில்லை
71) விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க:
"ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் எனப் புகழப்படுகிறார்".
(A) ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் யார்?
(B) ஸ்டீபன் ஹாக்கிங் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(C) ஸ்டீபன் ஹாக்கிங் எவ்வாறு புகழப்படுகிறார்?
(D) ஸ்டீபன் ஹாக்கிங் யாரோடு ஒப்பிடப்படுகிறார்?
(E) விடை தெரியவில்லை
72) கீழ்க்காணும் தொடருக்கான வினாவில் தவறானதைத் தேர்ந்தெடு:
தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்.
(A) எதைப் படித்தால் உன் தொல்லை மறக்கும்?
(B) உன் தொல்லை மறக்க எதைப் படிக்க வேண்டும்?
(C) தொல்காப்பியத்தைப் படித்தால் எந்தெந்த தொல்லை மறையும்?
(D) தொல்காப்பியம் படிப்பதன் பயன் என்ன?
(E) விடை தெரியவில்லை
73) இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் :
சரியான
தொடரைத் தேர்ந்தெடு:
சேர்ந்து,
சேர்த்து
(A) மாணவர்கள் சேர்ந்து சண்டையிட்டனர்; ஆசிரியர் சேர்த்து வைத்தார்
(B) ஆசிரியர்கள் சேர்த்து மாணவர்கள் சேர்ந்தனர்
(C) மாணவர்கள் சேர்த்து விளையாடி ஆசிரியர்கள் சேர்ந்தனர்
(D) மாணவர்கள் சேராமல் ஆசிரியர் சேர்ந்தார்
(E) விடை தெரியவில்லை
74. விடை வகை.
நீ எழுத வில்லையா? என்ற வினாவிற்குக் கை வலிக்கிறது, என்று உரைப்பது
(A) வெளிப்படை விடை
(B) குறிப்பு விடை
(C) உறுவது கூறல் விடை
(D) உற்றது உரைத்தல் விடை
(E) விடை தெரியவில்லை
75. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிக.
அக்ரானமி (Agronomy)
(A) நாட்டுப்புறவியல்
(B) நெற்பயிர்
(C) வேளாண்மை
(D) உழவியல்
(E) விடை தெரியவில்லை
76. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுது.
(A) திருவிழாவிற்கு முக்கியஸ்தர் வருகை புரிந்தார்.
(B) திருவிழாவிற்கு பிரதானமானவர் வருகை புரிந்தார்.
(C) திருவிழாவிற்கு உத்தியோகஸ்தர் வருகை புரிந்தார்.
(D) திருவிழாவிற்கு முதன்மையானவர் வருகை புரிந்தார்.
(E) விடை தெரியவில்லை
77. செங்கற்பட்டு - மரூஉ பெயரை எழுதுக.
(A) செல்கல் பட்டு
(B) செங்கை
(C) செங்கம்
(D) செங்கற்பட்டு தாலுக்கா
(E) விடை தெரியவில்லை
78. ஊர்ப்பெயர்களின் மரூஉ
உதக மண்டலம்
(A) மண்டலம்
(B) உதகை
(C) ஊட்டி
(D) குன்னூர்
(E) விடை தெரியவில்லை
79. பொருந்தாத இணை எது?
(A) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை - சீரும் சிறப்பும்
(B) எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை - உயர்வு தாழ்வு
(C) பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை - பச்சைப்பசேல்
(D) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை - இரவு பகல்
(E) விடை தெரியவில்லை
80. மேகலை - இச்சொல்லுக்கு சரியான சொல்லை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக.
(A) தேன்
(B) மழை
(C) செய்
(D) மணி
(E) விடை தெரியவில்லை
81. பொருத்தமான காலம் அமைத்தல் காலம் சரியாக அமைந்த சொற்றொடரைக் கண்டறிக.
(A) சுந்தர் நேற்று பள்ளிக்குச் சென்றான்.
(B) சுந்தர் நாளை பள்ளிக்குச் சென்றான்.
(C) சுந்தர் நாளை பள்ளிக்குச் செல்கிறான்.
(D) சுந்தர் நேற்று பள்ளிக்குச் செல்வான்.
(E) விடை தெரியவில்லை
82. பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) படித்தான் - நிகழ்காலம்
(B) பார்த்தேன் - இறந்தகாலம்
(C) படிப்பேன் - இறந்தகாலம்
(D) பார்க்கிறேன் - எதிர்காலம்
(E) விடை தெரியவில்லை
83. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
குற்றாலக் குறவஞ்சியைப் பாடியவர் _______?
(A) எவர்
(B) எது
(C) யார்
(D) ஏன்
(E) விடை தெரியவில்லை
84. நாங்கள் என்றும் தூய்மையைக் __________ சரியான சொல்லைத் தேர்வு செய்க.
(A) கடைபிடிப்போம்
(B) கடைப்பிடிப்போம்
(C) கடையைப்பிடிப்போம்
(D) கடையைப்பிடிப்போம்
(E) விடை தெரியவில்லை
85. கோ - இரு பொருள் தருக
(A) மதி - நிலவு
(B) வனம் - காடு
(C) வேந்தன் - மாடு
(D) அரசன் - பசு
(E) விடை தெரியவில்லை
86. ஆறு- இரு பொருள் தருக.
(A) காடு - மலை
(B) ஆடு - மாடு
(C) நதி - எண்ணிக்கை
(D) பரிசு - படம்
(E) விடை தெரியவில்லை
87. பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) மடு - மாடு
(B) தடு - தாடு
(C) விடு - வீடு
(D) எடு - ஏடு
(E) விடை தெரியவில்லை
88. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
(A) இன்பம், ஈகை
(B) அகல்,ஆவல்
(C) உணவு, ஊதல்
(D) எறும்பு, ஐவர்
(E) விடை தெரியவில்லை
89. கூற்று - சரியா? தவறா?
(1) உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.
(2) மாநாட்டுக்குரிய மொழி தமிழ்.
(A) கூற்று 1, 2 தவறு
(B) கூற்று 1,2 சரி
(C) கூற்று 1 மட்டும் சரி
(D) கூற்று 2 மட்டும் சரி
(E) விடை தெரியவில்லை
90. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் : நிலையான செல்வம்
(A) தங்கம்
(B) பணம்
(C) ஊக்கம்
(D) ஏக்கம்
(E) விடை தெரியவில்லை
91. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
அழுக்காறு
(A) பொறாமை
(B) தூய்மை செய்
(C) கோபம்
(D) பொறுமை
(E) விடை தெரியவில்லை
92. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
சரியான சொல்லைக் கண்டறிக.
''மெத்தை வீடு' என்று குறிப்பிடப்படுவது
(A) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
(B) படுக்கையறை உள்ள வீடு
(C) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
(D) மாடி வீடு
(E) விடை தெரியவில்லை
93. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க
காஞ்சி என்றால் _______ என்பது பொருள்.
(A) வெகுளாமை
(B) கல்லாமை
(C) நிலையாமை
(D) பொய்யாமை
(E) விடை தெரியவில்லை
94. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:
சொல் பொருள்
(a) கார்முகில் 1. முயலும்
(b) பரிதி 2.வயல்
(c) எத்தனிக்கும் 3.
மழைமேகம்
(d) கழனி 4.கதிரவன்
(a) (b) (c)
(d)
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
(C) 1 2 3 4
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை
95. சொற்களின் கூட்டுப்பெயர்கள்
பழம் - கூட்டுப்பெயர்
(A) பழசீப்பு
(B) பழக்கச்சை
(C பழக்குலை
(D) பழக்குவியல்
(E) விடை தெரியவில்லை
96. இடக்கரடக்கல் தொடரைக் கண்டறிக.
(A) அவன் ஆடு மேய்த்தான்
(B) கால் கழுவி வந்தான்
(C) அவள் பூவைப் பறித்தாள்
(D) ஆடையைத் துவைத்தான்
(E) விடை தெரியவில்லை
97. சரியான தொடரைக் கண்டறிக.
(A) செடியில் பூ பூத்திருந்தன
(B) காடு செழிப்பாக இருந்தன
(c) மாடுகள் புற்களை மேய்ந்தது
(D) மான்கள் வேகமாக ஓடின
(E) விடை தெரியவில்லை
98. சொல் - பொருள் - பொருத்துக:
(a) கான் 1. கரடி
(b) உழுவை 2. சிங்கம்
(c) மடங்கல் 3. புலி
(d) எண்கு 4. காடு
(a)
(b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 3 2 1 4
(D) 1 3 2 4
(E) விடை தெரியவில்லை
99. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) இவை பூக்கள் அன்று
(B) இவை பூ அன்று
(C) இவை பூக்கள் அல்ல
(D) இவை பூ அல்ல
(E) விடை தெரியவில்லை
100. பன்மைச் சொல்
இவை பழங்கள்
(A) அன்று
(B) அல்ல
(C) எத்தனை
(D) எவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY:
01) B 02) C 03) B 04) D 05) D
06) C 07) D 08) C 09) A 10) B
11) A 12) A 13) B 14) D 15) C
16) D 17) B 18) A 19) A 20) C
21) B 22) B 23) C 24) D 25) C
26) B 27) C 28)
B 29) A 30) B
31) B 32) B 33) B 34) C 35) B
36) D 37) C 38) A 39) B 40) A
41) A 42) B 43) B 44) C 45) D
46) D 47) A 48) D 49)
B 50) C
51) C 52) D 53) C 54) C 55) C
56) B 57) B 58) C 59) C 60) A
61) D 62) A 63) D 64) C 65) B
66) C 67) A 68) C 69) A 70) B
71) C 72) C 73) A 74) D 75) D
76) D 77) B 78) B 79) D 80) D
81) A 82) B 83) C 84) B 85) D
86) C 87) B 88) D 89) B 90) C
91) A 92) D 93) C 94) B 95) C
96) B 97) D 98) A 99) C 100) B
TO DOWNLOAD ABOVE
TNPSC TAMIL QUESTIONS
COLLECTION - 06 FREE PDF FILE